புதினா சட்னி

 


புதினா சட்னி

தேவையான பொருட்கள்:


 * புதினா இலைகள் - 1 கட்டு (தண்டுகளை நீக்கி)


 * காய்ந்த மிளகாய் - 2-3 (காரத்திற்கேற்ப)


 * இஞ்சி - சிறிய துண்டு( வாசனை பிடித்தால் பயன்படுத்தலாம் இல்லையென்றால் தேவையில்லை)


 * பூண்டு - 5 பல்


 * புளி - சிறிய நெல்லிக்காய் அளவு


 * வறுத்த கடலைப்பருப்பு/துருவிய தேங்காய் - 1-2 டேபிள்ஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப)


 * சின்ன வெங்காயம் - 15(தேவைக்கு ஏற்ப)


 * உப்பு - தேவையான அளவு


 * தக்காளி-இரண்டு


 * நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் (வதக்க) + தாளிக்க


 * கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - தாளிக்க


செய்முறை:


 * புதினா இலைகளை நன்கு அலசி, தண்ணீர் வடிய விடவும்.


 * ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் போட்டு பொன்னிறமாக வந்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும், 


* இன்னும் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.


* தக்காளியையும் சேர்த்து அதனையும் நன்றாக வதக்கவும்.


 * அடுத்து புதினா இலைகளைச் சேர்த்து, 1-2 நிமிடங்கள் மட்டும் நிறம் மாறாமல் வதக்கி அடுப்பை அணைக்கவும்.


 * வதக்கிய பொருட்கள் ஆறியதும், மிக்ஸி ஜாரில் புளி, உப்பு, வறுத்து வைத்த கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, மிருதுவாக அரைக்கவும்.


 * வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலக்கவும்.


 புதினாவின் சுவை மாறாமல் கசப்பு இல்லாமல் சுவையான புதினா சட்னி தயார். 


முக்கிய குறிப்பு :புதினாவின் வாசம் மாறாமல் இருக்க, புதினாவை இரண்டு நிமிடம் மட்டும் வதக்கினால் போதும்.



Comments